Jagame Thandhiram: ரசிகர்கள் விரும்பிக் கேட்ட புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்!

ஜகமே தந்திரம்

படம் திரையரங்கில் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், 17 மொழிகளில், 190 நாடுகளில் ஜகமே தந்திரம் வெளியாவதாக நேற்று வெளியான அறிவிப்பு, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜகமே தந்திரம் படத்தில் ரசிகர்கள் விரும்பிக் கேட்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார் தயாரிப்பாளர். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் வரும் 18 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படம் திரையரங்கில் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், 17 மொழிகளில், 190 நாடுகளில் ஜகமே தந்திரம் வெளியாவதாக நேற்று வெளியான அறிவிப்பு, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜகமே தந்திரத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்துக்கே சுருளி என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தனர். இறுதியில் படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் ஜகமே தந்திரத்தை தேர்வு செய்தனர். தனுஷ் கோட் அணிந்து வாயில் சிகரெட்டுடன் வில்லனை நோக்கி அலட்சியமாக துப்பாக்கியை பிடித்திருக்க, வில்லனின் ஆள்கள் அவரை சூழ்ந்து நின்று துப்பாக்கியால் குறிப்பார்க்கும் காட்சி டிரைலரில் இடம்பெற்றிருந்தது.



மாஸான இந்தக் காட்சியின் புகைப்படத்தை வெளியிடும்படி ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் காரணமாக தயாரிப்பாளர் சசிகாந்த் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Also read... The Family Man: ஃபேமிலி மேன் அடுத்த சீசனில் நடிக்க 2 மடங்கு சம்பளம் கேட்கும் மனோஜ் பாஜ்பாய்!

ஜகமே தந்திரம் படத்தை சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோ பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. திரையரங்கில் வெளியாக வேண்டிய படம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியானாலும் தயாரிப்பாளருக்கு லாபமே என்கின்றன செய்திகள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: