கோலிவுட்டில் பிசியாக நடித்துவரும் விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் பிரபல நடிகை இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சிந்துபாத் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை என்றாலும் அடுத்தடுத்து ‘சங்கத் தமிழன்’, கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் ஆகிய படங்கள் விஜய்சேதுபதி படத்தில் உருவாகி வருகிறது.
அடுத்ததாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும், துக்ளக் தர்பார் படத்திலும் நடிக்க இருக்கிறார்.
வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது.
நடிகை அதிதி ராவ்
இதனை தொடர்ந்து தற்போது துகளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.