Santhanam: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் சபாபதி!

புகழ் - சந்தானம்

கொரோனா பெருந்தொற்றால் திரையரங்குகள் மூடியிருக்கும் நிலையில் அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் சபாபதியை நேரடியாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப்படம் திரையரங்குக்குப் பதில் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

சந்தானம் ஹீரோவாக நடித்தப் படங்களில் தில்லுக்கு துட்டு படம்தான் ஓரளவு ஓடியது. கடைசியாக வெளியான பாஸ் ஜெயராஜ் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. எனினும் கொரோனா காலமானதால் ரசிகர்கள் திரையரங்குக்கு செல்ல தயக்கம் காட்டியதில் பாரிஸ் ஜெயராஜின் வெற்றி பாதித்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. கொரோனா குமார் என்ற படத்தில் அவர் நடிப்பதாக தகவல். இந்த களேபரங்களுக்கு நடுவில் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்தப் படம் சபாபதி. ஆர்கே என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் சந்தானத்தின் அப்பாவாக நடித்துள்ளார். அப்பா மகனுக்கிடையிலான புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

Also read... Vijay Sethupathi, Tamannaah: மாஸ்டர் செஃப் - வைரலாகும் விஜய் சேதுபதி, தமன்னா புகைப்படம்!

கொரோனா பெருந்தொற்றால் திரையரங்குகள் மூடியிருக்கும் நிலையில் அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் சபாபதியை நேரடியாக வெளியிட முடிவு செய்துள்ளனர். சோனி லிவ்வில் கடந்த 25 ஆம் தேதி தேன் படம் வெளியானது. அடுத்த மாதம் சபாபதி. அதையடுத்து நரகாசூரன், கடைசி விவசாயி ஆகிய படங்கள் வெளியாகின்றன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: