ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள் இருந்தாலும், அவற்றில் சில மட்டுமே மக்களுக்கு பிடித்தமானதாக மாறுகிறது. இது போன்ற சீரியல்களின் முக்கிய நேயர்களாக இருப்பவர்கள் இல்லத்தரசிகளான பெண்கள் தான். எனவே இவர்களுக்கு அதில் நடிக்க கூடிய பெண் கதாபத்திரங்கள் மீது அதிக ஈர்ப்பு எப்போதும் இருக்கும்.
பெரும்பாலும் எல்லா தொலைக்காட்சி தொடரிலும் உள்ள கதாநாயகிகளுக்கும் இல்லத்தரசிகள் ரசிகர்களாக இருப்பது வழக்கம் தான். அந்த வகையில் விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரஷித்தா மஹாலக்ஷ்மியை எல்லோருக்கும் பிடிக்கும். இவர் தொடக்க காலத்தில் விஜய் டிவி மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியின் பிரபல தொடர்களில் கதாநாயகியாக நடித்தார்.
இதை தொடர்ந்து பல சேனல்களில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தன. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சில தொடர்களில் நடித்தார். பிறகு மீண்டும் விஜய் டிவியின் பிரபல சீரியலான 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நடித்து வந்தார். சில காரணங்களால் அதில் இருந்து விலகி கொண்டார்.
தற்போது இவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'இது சொல்ல மறந்த கதை' என்கிற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் முழுக்க மஹாலக்ஷ்மியை மையமாக கொண்டு நகர்வதால், இதன் கதைக்களம் மிகவும் புதுமையாக உள்ளது. இந்த தொடரில் இவர் விதவையாக நடித்து வருகிறார். இந்த தொடர் ஆரம்பித்த சில நாட்களிலேயே பலர் இதற்கு ரசிகர்களாக மாறி விட்டனர். மேலும் இந்த தொடரில் இவர் இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்து வருகிறார்.
இதில் இவர் தனது கணவரின் மறைவுக்குப் பிறகு தனக்கான பாதையைத் தேடி செல்லும் பெண்ணாக இந்த தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த தொடரை எதற்காக தேர்வு செய்தீர்கள் என்று மஹாலக்ஷ்மியிடம் கேட்டபோது சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். “இதுக்கு முன்பு இரண்டு ஸ்கிரிப்ட்களை படித்தேன். ஆனால் இந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு ஸ்பார்க் இருந்தது. சாதனா என்கிற கதாபாத்திரத்துடன் தனிப்பட்ட முறையில் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
ஏனென்றால் எனது வீட்டு உதவியாளர் ஒரு விதவை. அவர் தனது குழந்தைகளை படிக்க வைக்க கடினமாக முயற்சி செய்து வருகிறார். நான் அவருடைய காலணியில் என்னை வைத்துக்கொண்டு பார்க்கிறேன். மேலும் என் குணத்தின் ஆழம், அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டேன். பிறகு, எல்லாமே சரியாகிவிட்டன” என்கிறார் மஹா. மேலும் இந்த தொடரின் வசனங்கள் குறித்து, "வசனங்கள் நன்றாக எழுதப்படாவிட்டால் சர்ச்சைக்குரியதாகிவிடும். எங்களுடைய மொத்த குழுவும் இதற்காக கடினமாக உழைத்து வருகின்றனர். மேலும் வசனங்கள் எங்களிடம் வருவதற்கு முன்னர் நிறைய விவாதங்களை அது குறித்து நடத்துவார்கள். அவர்கள் அதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
சகோதரிகள் அணி... கவனம் பெறும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - செளந்தர்யா ரஜினிகாந்த் படம்!
அடுத்தாக சின்னத்திரையில் இவ்வளவு ஆண்டு காலம் பயணித்த மஹாவின் அனுபவம் குறித்து கேட்டபோது, “மக்களின் மனநிலை மாறிவிட்டது; அவர்கள் சிறந்த கதைகளை விரும்புகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் பெரிய சமூக ஊடக ஏற்றம் உள்ளது. இன்று, நம் வசதிக்கேற்ப சீரியல்களைப் பார்க்கலாம். எனவே தொலைக்காட்சியில் நல்ல கதைகளைக் கொண்டு வருவது முக்கியம்” என்று மஹாலக்ஷ்மி தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.