பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - ஐஸ்வர்யாவை திருமணம் செய்வது யார்? கண்ணனா - பிரசாந்த்தா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

குடும்பத்தினர் ஒன்று கூடி ஆனந்தக் கண்ணீருடன் அண்ணிக்கு வளைகாப்பை செய்தனர்.

 • Share this:
  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்ளப்போவது கண்ணனா அல்லது பிரசாந்தா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

  பரபரப்பு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நகர்ந்து வருகிறது. அண்ணி தனத்தின் வளைக்காப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. குடும்பத்தினர் ஒன்று கூடி ஆனந்தக் கண்ணீருடன் அண்ணிக்கு வளைகாப்பை செய்தனர். அவர் தாய் வீட்டுக்கு கிளம்பும்போது கதிர், கண்ணன், ஜீவா என அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். இப்படி, அனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் - ஐஸ்வர்யா - பிரசாந்த் காதல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அண்ணி தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கண்ணனும், ஐஸ்வர்யாவும் கண்களாலேயே ரொமான்ஸ் செய்து கொண்டனர். இது ஐஸ்வர்யாவுக்கு நிச்சயிக்கப்பட்ட பிரசாந்துக்கும் தெரியவர கடும் கோபமடைந்தார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாவே, பிரசாந்த்திடம் சென்று தான் கண்ணனை காதலிப்பதையும், இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதையும் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால், பிரசாந்துக்கும் ஐஸ்வர்யாவை பிடித்துவிட்டதால், ஐஸ்வர்யாவை பிரிய மனமில்லை.

  இந்த நேரத்தில் மூர்த்தியின் வீட்டுக்கு வரும் ஐஸ்வர்யாவின் பெற்றோர், பிரசாந்துக்கும், ஐஸ்வர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதையும், அதற்கான தேதியையும் கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சியடையும் கண்ணன், ஐஸ்வர்யாவுக்கு போன்போட்டு விவரத்தை கேட்கிறார். அப்போது, காதல் விஷயத்தை பிரசாந்திடம் தெரிவித்துவிட்டதாகவும், அவர் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடுவார் என்றும் ஐஸ்வர்யா சொல்லும்போது பின்னாடி நிற்கும் பிரசாந்த், " நான் என்ன முட்டாளா? எனக்கு ஒன்னு வேணும்னா, வேணும்" எனக் கூற, அதனைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

  Also read... சாதனை விலைக்கு விற்கப்பட்ட விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை!

  இதற்கிடையே, ஏற்கனவே தான் திருடிய பணத்துக்காக குற்றவாளியாக குடும்பத்தினர் முன்பு கண்ணன் நிற்கிறார். இதனால், கண்ணன் - ஐஸ்வர்யா காதல் சக்சஸ் ஆகுமா? என கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஐஸ்வர்யாவின் காதல் விஷயத்தை தெரிந்தும், அவளை திருமணம் செய்து கொள்ள பிரசாந்த் ஆசைப்படுகிறார். கண்ணன், குடும்பத்திலும் பிரச்சனை, காதலிலும் நெருக்கடி என இருபுறமும் சிக்கித் தவிக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.

  பிரசாந்தை சமாளிக்க ஐஸ்ர்யாவும், கண்ணனும் போடும் திட்டமே அவர்களின் காதலை திருமணத்துக்கு எடுத்துச் செல்லும் புள்ளியாக இருக்கப்போகிறது. கண்ணனும் - ஐஸ்வர்யாவும் காதலிப்பது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரிந்தால் என்னவாகப்போகிறது? கண்ணனின் குடும்பத்துக்கு தெரிந்தால் அவர்கள் யாருக்கு சப்போர்ட் செய்யப்போகிறார்கள் என்பது மற்றொரு டிவிஸ்டாக இருக்கிறது. இத்தனை டிவிஸ்ட்களும் கண்ணன் - ஐஸ்வர்யாவின் காதலில் சூழ்ந்திருப்பதால், அடுத்தடுத்து ஒளிபரப்பாகும் ஒவ்வொரு எபிசோடையும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கப்போகிறது.
  Published by:Vinothini Aandisamy
  First published: