கிளாசிக்கல் இசைக்கு கிராமிய இசைகள் குறைந்தது இல்லை - மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ரஞ்சித்

மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி. (படம் - பழனி குமார் ஃபேஸ்புக்)

அனைத்து தகுதியும், திறமைகளும் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத, நாட்டுப்புற, கிராமிய இசைக்கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்கள் இசையின் நோக்கம் என ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னையில் நடைபெற்று வரும் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் பறை இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிதான் நடைபெற்றுவருகிறது.

  இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்கள் இசை என்ற பெயரில் 8 நாட்கள் இசை விழா நடைபெற்று வருகிறது. கிளாசிக்கல் இசை வடிவங்களுக்கு எந்த வகையிலும் கிராமிய மற்றும் நாட்டுப்புற இசைகள் குறைந்தது அல்ல என்பதை பறைசாற்றுவதற்காக இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  முதல் நாள் நிகழ்ச்சியில் பறைஇசை கலைஞர்கள் தங்களது பறையோசையை எழுப்பி திறமைகளை வெளிப்படுத்தினர். நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் கிராமிய பாடல்களை பாடி. ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்தனர்.

  Also read... அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

  இந்த நிகழ்ச்சிகளில் திரைப்பட இயக்குநரும் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா.ரஞ்சித் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிளாசிக்கல் இசைக்கு இணையான முக்கியத்துவம் கிராமிய மற்றும் நாட்டுப்புற இசைக்கு கிடைப்பதில்லை என குறிப்பிட்டார். இசை என்பது பொதுவான ஒன்றுதான் என்றும் அதில் உயர்வு, தாழ்வு பார்க்க இயலாது என்று தெரிவித்தார்.

  அனைத்து தகுதியும், திறமைகளும் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத, நாட்டுப்புற, கிராமிய இசைக்கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்கள் இசையின் நோக்கம் என தெரிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதி வரை இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: