இந்தியாவில் வசூலை வாரிக்குவிக்கும் தி லயன் கிங்... ஆச்சரியப்படுத்தும் முதல்நாள் கலெக்‌ஷன்...!

The Lion King | வார இறுதி நாட்களில் இதன் வசூல் வேட்டை கூடுதலாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

news18
Updated: July 21, 2019, 7:24 AM IST
இந்தியாவில் வசூலை வாரிக்குவிக்கும் தி லயன் கிங்... ஆச்சரியப்படுத்தும் முதல்நாள் கலெக்‌ஷன்...!
தி லயன் கிங்!
news18
Updated: July 21, 2019, 7:24 AM IST
ஹாலிவுட்டில் 90-களில் வெளியான மறக்க முடியாத படங்களில் ஒன்று தி லயன் கிங். அன்றைய தேதியில் இருந்த உயர் ரக தொழில்நுட்பங்களை கொண்டு வெளியான இப்படம் தமிழ் உட்பட உலகம் முழுக்க பல மொழிகளில் வெளியாகி சக்கைப் போடு போட்டது.

அண்மைக் காலமாக ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் தங்களுடைய பழைய படங்களை புது தொழில்நுட்பத்துக்கேற்ப மறு உருவாக்கம் செய்து வெளியிடும் போக்கை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக 'தி ஜங்கிள் புக்' படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு சுதாரித்துக்கொண்ட டிஸ்னி நிறுவனம், அதே இயக்குநரை கொண்டு தற்போது 'தி லயன் கிங்' படத்தையும் அனிமேஷன் வடிவில் மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.

1994-ம் ஆண்டு கார்டூன் வடிவில் வெளியான 'தி லயன் கிங்' திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஃபோட்டோ ரியாலிஸ்டிக் எனும் புதிய வகை தொழில்நுட்பத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. உலகளவில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு உருவாகியிருக்கும் முதல் படம் இதுதான்.


இதையும் படியுங்க.... ஆடை - விமர்சனம்

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு இந்தியில் அப்பா சிங்கத்திற்கு ஷாருக்கானும் மகன் சிம்பா சிங்கத்திற்கு அவரது மகன் ஆர்யன் கானும் டப்பிங் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோல் தமிழிலும் அரவிந்த் சாமி, சித்தார்த், ஐஷ்வர்யா ராஜேஷ், ரோபோ ஷங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே தங்களது நட்சத்திர அந்தஸ்தை தூக்கி எறிந்துவிட்டு இப்படத்துக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்க... கடாரம் கொண்டான் விமர்சனம்

Loading...

அப்பா சிங்கத்துக்கும் மகன் சிங்கத்துக்குமான பாசப் போராட்டம், குட்டி சிங்கம் செய்யும் சாகசங்கள் என 90-களில் பிறந்தவர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவே கலந்துவிட்ட தி லயன் கிங் படமும் அதன் கதாபாத்திரங்களும் மறுபடியும் அனிமேஷன் வடிவில் திரைக்கு வந்திருப்பதால் இப்படத்துக்கு உலகம் முழுக்கவே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் முதல்நாளில் இப்படம் 13 கோடி வரை வசூல் செய்து அண்மையில் வெளியான ஸ்பைடர் மேன் படத்தின் வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் இதன் வசூல் வேட்டை கூடுதலாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கனவு நாயகன் விஜய் தேவரகொண்டா நேர்காணல்

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...