கண்ணான கண்ணே சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் தெலுங்கில் ஒளிபரப்பான ’பௌர்ணமி’ மற்றும் கன்னட மொழித் தொடரான ’மானசரே’ தொடர்களின் மறு ஆக்கமாக தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியும், ஏ.ஆர்.பிலிம் என்டர்டெயின்மென்டும் இணைந்து இந்த சீரியலை தயாரிக்கின்றன. கண்ணான கண்ணே சீரியலின் முதன்மை அம்சமே பல ஆண்டுகளாக மக்களிடம் அறிமுகமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இதனால் மக்களிடம் எளிதாக ரீச்சான இந்த தொடர், தற்போது அனைவரும் விரும்பி பார்க்கும் தொடராகவும் உள்ளது.
லீட் ரோலில் ராகுல் ரவி மற்றும் நிமிக்ஷிதா நடிக்கின்றனர். பப்ளு என அழைக்கப்படும் பிரபல நடிகர் பிரித்திவி ராஜ், நித்யா தாஸ், அக்ஷிதா, சுலோச்சனா, பீர்த்தி சஞ்சீவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையில் மீராவாக வரும் நிமிக்ஷிதா, அம்மா, தங்கை, பாட்டி என அனைவரது அன்பிலும் செல்லப் பிள்ளையாக வளர்கிறாள். ஆனால் அவளின் மனதில் ஏதோ இனம்புரியாத கவலை இருந்து கொண்டே இருக்கிறது. தனக்கு தந்தை இல்லாத உணர்வு அவளை வதைப்பதால், தந்தையின் அன்புக்காக ஏங்குகிறாள்.
அந்த நேரத்தில் யுவராஜ் கோடீஸ்வரனாக வரும் ராகுல் ரவி, அவளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறான். இதனால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணத்தை நோக்கி நகர்கிறது. கதைப்படி இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வரும் நிலையில்,
சீரியல் 200 வது எபிசோடைக் கடந்துள்ளது. இது நாடகக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகிச்சியான சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என எண்ணிய நாடகத்தில் நடிக்கும் பிரபலங்கள், சீரியலின் 200வது எபிசோடை ஒன்றாக கூடி கொண்டாடியுள்ளனர்.
Photogallery: வைகைப்புயல் வடிவேலு - அரிய புகைப்படங்கள்!
பப்ளு பிரித்திவி ராஜ், நிமிக்ஷிகா, அக்ஷிதா, ப்ரீத்தி சஞ்சீவ், ராகுல்ரவி ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பிரித்திவிராஜ் எழுதியுள்ள பதிவில் தங்கள் மீது அன்பு செலுத்தி கண்ணான கண்ணே சீரியலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார். லீட் ரோலில் நடிக்கும் நிமிஷிகா, ரசிகர்கள் காட்டும் அன்புக்கு நன்றி, அதே அன்புடன் நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம் எனக் கூறியுள்ளார். அக்ஷிதா தெரிவித்துள்ள நன்றியில், ரசிகர்களின் அன்புடன் 200வது எபிசோடை நிறைவு செய்துள்ளோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.