Jagame Thandhiram: ஜகமே தந்திரம் ரிலீஸ்: தனுஷுக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹாலிவுட் இயக்குனர்கள்!

ஜகமே தந்திரம், நடிகர் தனுஷ்

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான Russo Brothers புகழ்பெற்ற Avengers வரிசையின் இறுதி இரண்டு பாகங்களை இயக்கியவர்கள்

  • Share this:
தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில் ஹாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் The Gray Man படத்தின் இயக்குனர்களான Russo Brothers இப்படம் வெற்றி பெற ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் எழுதி இயக்கியிருக்கும் படம் ஜகமே தந்திரம். ஸ்காட்லாந்து நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்க் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். YNOT Studios மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. ரஜினியை வைத்து பேட்ட மற்றும் ஜிகர்தண்டா, இறைவி, பீசா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் முதல் முறையாக தனுஷுடன் இப்படத்திற்காக இணைந்துள்ளார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஜகமே தந்திரம் கேங்ஸ்டார் படமாக உருவாகியுள்ளது. யூடியூப்-ல் வெளிடப்பட்ட ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெயிலர் இணையத்தை கலக்கி வருகிறது.



இதனிடையே நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான The Gray Man எனும் படத்திலும் நடித்து வருகிறார். ஜகமே தந்திரம் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் தி கிரே மேன் படத்தின் இரட்டை இயக்குனர்களான Russo Brothers தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 'சூப்பர் டா தம்பி' என தமிழில் வாழ்த்து தெரிவித்ததோடு தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.



இதற்கு நடிகர் தனுஷும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான Russo Brothers புகழ்பெற்ற Avengers வரிசையின் இறுதி இரண்டு பாகங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா காரணமாக தியேட்டரில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதால் எதிர்ப்பையும் மீறி ஓடிடி தளத்தில் இப்படம் வெளியிடப்படுகிறது. 190 நாடுகளில் ஃபிரெஞ்சு, ஸ்பேனிஷ், பிரேசிலியன், வியண்டாமிஸ், இந்தோனேசியன், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட 17 மொழிகளில் டப் செய்யப்படு இப்படம் வெளிவர உள்ளது.
Published by:Arun
First published: