• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்கார் படத்தின் 'சிங்கிள் டிராக்' செப்.24 வெளியாகிறது

சர்கார் படத்தின் 'சிங்கிள் டிராக்' செப்.24 வெளியாகிறது

  • News18
  • Last Updated :
  • Share this:
    சர்கார் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அரசியல் படமாக உருவாகி வரும் இந்த படத்தில், ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர். மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து சர்கார் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

    படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ள படக்குழுவினர் இந்த படத்தின் முதல் பாடலை வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக மெர்சல் படத்தின் ’ஆளப்போறான் தமிழன்’ பாடலையும் முன்கூட்டியே வெளியிட்டிருந்தனர். அந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே பாணியில் சர்கார் படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: