ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைக்கா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் 167-வது படமான தர்பார் படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.
இதற்கான முதற்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. இதைதொடர்ந்து, நாளை முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ளது, பட தயாரிப்பு நிறுவனமான லைகா.
Here We Go! #Thalaivar167 #Darbar@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad pic.twitter.com/cjmy4gQJjy
— Lyca Productions (@LycaProductions) April 9, 2019
மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது வரை படத்தின் நாயகியாக நயன்தாரா மட்டுமே தேர்வாகியுள்ளார் என்று மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் போது வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு விரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also see...
சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Nayantara, Director ar murugadoss, Lyca, Rajinikanth