சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கின - இந்தியன் 2 இறுதிக்கட்ட பணிகளும் தொடக்கம்

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: July 8, 2020, 7:46 PM IST
சென்னையில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், இன்றுமுதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட பணிகளும் தொடங்கியுள்ளன.
கொரோனா ஊரடங்கால் திரைத்துறை மட்டுமல்லாது சின்னத்திரையும் படப்பிடிப்புகளும் 100 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளன. இதன் காரணமாக படப்பிடிப்புகளையே நம்பியிருந்த தினசரி கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
எனவே, குறைந்தது சின்னத்திரை படப்பிடிப்புகளையாவது நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென ஃபெப்சி மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஏற்று சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென கடந்த மே 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், 20 பேரை மட்டுமே வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது எனவும், எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் சின்னத்திரை தயாரிப்பாளர்களால் மறுபடியும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிகபட்சமாக 60 பேர் வரை படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி கடந்த 9ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமானதால், ஜூன் 19 முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், படப்பிடிப்பு தொடங்கிய 10 நாட்களிலேயே மறுபடியும் நிறுத்தப்பட்டது.Also see... அடியே அழகே... என் அழகே அடியே... நிவேதா பெத்துராஜின் நியூ ஆல்பம்..!
இந்நிலையில், கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால், நிறுத்தி வைக்கப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் இன்று முதல் மறுபடியும் தொடங்கப்பட்டுள்ளன. பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களும் அனுமதியளிக்கப்பட்ட கையோடு படபிடிப்புகளை சென்னையில் துவங்கியுள்ளன.
மேலும் திரைப்படங்களுக்கான பணிகளும் ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து வேகமாக நடைபெறத் தொடங்கியுள்ளன, கமல்ஹாசனின் இந்தியன் 2, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட போஸ்ட் ப்ரொடர்ஷன் பணிகளும் நடைபெற தொடங்கியுள்ளது. விரைவில்யிலேயே அரசின் வழிகாட்டுதலோடு திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் திரைத்துறை மட்டுமல்லாது சின்னத்திரையும் படப்பிடிப்புகளும் 100 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளன. இதன் காரணமாக படப்பிடிப்புகளையே நம்பியிருந்த தினசரி கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
எனவே, குறைந்தது சின்னத்திரை படப்பிடிப்புகளையாவது நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென ஃபெப்சி மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.