• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல ஓடிடியில் வெளியாகும் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

பிரபல ஓடிடியில் வெளியாகும் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

வஸந்த்

வஸந்த்

அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை தழுவி இந்தப் படத்தை வஸந்த் எடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வஸந்த் எஸ் சாய் (கேளடி கண்மணி வஸந்த்) இயக்கத்தில் பல வருடங்கள் முன்பு தயாரான படம், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இதுவரை திரையரங்குக்கு வராமல் இருந்த படத்தை பிரபல ஓடிடி வாங்கி வெளியிடுகிறது.

வஸந்த் இயக்கத்தில் கடைசியாக மூன்று பேர் மூன்று காதல் படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை அப்படம் பெறவில்லை. அதன் பிறகு அவர் இயக்கிய படம், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். சில திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால், திரையரங்கில் வெளியிட யாரும் முன்வரவில்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை தழுவி இந்தப் படத்தை வஸந்த் எடுத்துள்ளார். இளையராஜா இசை. வஸந்தே படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.



இந்தப் படத்தை செப்டம்பரில் சோனிலிவ் வெளியிடுகிறது. இதேபோல் பல வருடங்களாக பெட்டிக்குள் இருந்த நரகாசூரன் படத்தையும் சோனிலிவ் வெளியிடுகிறது. அப்படம் ஆக.13 வெளியாகவுள்ளது

Also read... ராம் சரண் படத்தின் நாயகி யார்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஷங்கர்!

ஆகஸ்ட் 6 ஆம் தேதி மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் நவரசா ஆந்தாலஜியில் வஸந்த் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: