சமந்தா வில்லி ரோலில் நடிக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2 டீசர் வெளியானது!

சமந்தா வில்லி ரோலில் நடிக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2 டீசர் வெளியானது!

தி ஃபேமிலி மேன்

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த சமந்தா, “என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது வேறுமாதிரி இருக்கும். பல விதிமுறைகளை உடைத்து இருக்கிறேன், இந்த தொடரில்  சண்டை காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன் என கூறியிருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் அறிமுகமான சமந்தா மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2017ஆம் ஆண்டு நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

இதனிடையே இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான, புகழ்பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றான 'ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் 2020ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. "தி பேமிலி மேன்" என்ற வெப் சீரிஸ் முதல் பாகம் பிகவும் பிரபலம் அடைந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் நடித்துள்ளார். 

மேலும் தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2 வருகிற பிப்ரவரி 12ம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.  

Also read... குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் வென்ற எலக்ட்ரீஷியன்: இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்!

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த சமந்தா, “என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது வேறுமாதிரி இருக்கும். பல விதிமுறைகளை உடைத்து இருக்கிறேன், இந்த தொடரில்  சண்டை காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் 'ஃபேமிலி மேன்’ -2 வெப் சீரிஸின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். 

திரில்லர் காட்சிகள் நிறைந்துள்ள அந்த டீசரில், துப்பாக்கி முனை காட்சிகள் உள்ளது. நடிகை பிரியாமணி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சீரிஸின் ட்ரைலர் வரும் ஜன., 19ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் அளித்துள்ளனர். பிப்., 12ம் தேதி முதல்  'ஃபேமிலி மேன்’ -2 சீரிஸின் தொடர்கள் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: