முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Biggboss 4 Tamil | இன்றும் தொடரும் கால் சென்டர் டாஸ்க்.. அனிதாவின் கேள்வியால் கடுப்பான ரியோ..

Biggboss 4 Tamil | இன்றும் தொடரும் கால் சென்டர் டாஸ்க்.. அனிதாவின் கேள்வியால் கடுப்பான ரியோ..

அனிதா மற்றும் ரியோ

அனிதா மற்றும் ரியோ

இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரியோவிற்கு அனிதா கால் செய்து பேசுகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் இன்று 60-வது நாளை எட்டுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டின் தலைவராக ஜித்தன் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ஷிவானி, ஆஜித், அனிதா, ரம்யா பாண்டியன், சனம், நிஷா மற்றும் ஆரி ஆகியோர்  உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

இதனிடையே அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் வித்தியாசமான முறையில் நடைபெறுகிறது. அதாவது கால் சென்டர் டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஊழியர் ஒருவருக்கு கால் செய்து பேசி அவரை டென்ஷன் செய்து அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக செல்வார்கள். பேசி முடித்தபிறகு மீண்டும் போன் செய்து தங்களது ஸ்டார் ரேட்டிங்கையும் கேட்க வேண்டும். இது தான் டாஸ்க். 

இந்த டாஸ்க் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் அர்ச்சனா - பாலாஜி, சனம் - சம்யுக்தா, சோம் - கேபி, ரியோ - ஆஜித் , ரம்யா - ரமேஷ் ஆகியோர் முதல் நாள் கால் சென்டர் டாஸ்கை நிறைவு செய்தனர். பின்னர் நிவர் புயல் காரணமாக டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் தொடங்கியது. கடந்த வாரம்  நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க்கில் ஊழியர்களாக இருந்தவர்கள் தற்போது வாடிக்கையாளர்களாக மாறியிருக்கிறார்கள். அதன்படி நேற்று சோம் - கேப்ரியல்லா, ஆஜித் - அர்ச்சனா , பாலாஜி - ஆரி ஆகியோர் டாஸ்க்கில் ஈடுபட்டனர் .

பாலாஜி - ஆரிக்கு கால் செய்து பேசுகையில், நான் உங்கள் ரசிகர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் என்கிறார். கெட்டவன்னு சொல்றான் பாருங்க அவனை நம்பலாம். நல்லவன்னு சொல்றான் பாருங்க அவனை கூட நம்பலாம். அனால் நான் மட்டும் தான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவனை மட்டும் நம்பவே கூடாது என்று கூறினார். மேலும் ஒரு லிஸ்ட் போட்டு ஆரியிடம் கேள்வி எழுப்பிய பாலாஜி அவருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்காமல் கட் பண்ணியது விவாதத்திற்குள்ளாகியது.அவரே அழைப்பை துண்டித்த காரணத்தால் பாலாஜி அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார்.

Also read... Gold Rate | சவரனுக்கு ₹384‌ உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சோம் - கேப்ரியல்லா அழைப்பு சுவாரஸ்யமாக சென்றது. அதேபோல ஆஜித் - அர்ச்சானாவிடம் நாசூக்கான கேள்விகளை எழுப்பினார். இதனால் கேப்ரியல்லா, ஆஜித் நாமினேஷனில் இருந்து தப்பின்னர். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரியோவிற்கு அனிதா கால் செய்து பேசுகிறார். அப்போது ஒரு தனிப்பட்ட போட்டியாளராக விளையாடுகிறீர்களா? என அனிதா கேட்க, நான் தனியாக தான் விளையாடுகிறேன் என ரியோ பதில் கூறுகிறார். 

ஆனால் அப்படி தெரியவில்லை என பதிலடி கொடுத்த அனிதா, வெளியில் போடாத ஒரு முகமூடியை இங்கு போட்டு வந்திருக்கும் நீங்கள், 'நான் பாதி முகத்தை தான் காட்டுவேன், நீ எனக்கு ட்ராபி கொடு என சொன்னால் மக்கள் எப்படி கொடுப்பாங்க என நீங்கள் நினைக்கறீங்க" என ரியோவிடம் கேட்டிருக்கிறார். இதற்கு ரியோ பதிலளிக்க முயன்ற நேரத்தில், அனிதா குறுக்கிட்டு நான் கேட்கும் கேள்வியை புரிந்துகொண்டு நீங்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்' என நினைப்பதாகவும் கூறினார். டாஸ்க் முடிந்து வெளியில் வந்த பிறகு அனிதாவிடம் 'Good call' என கூறி ரியோ பாராட்டுகிறார். ஆனால் உள்ளே சென்று சோம், ரமேஷிடம் 'இது டாஸ்க் என்பதால் கண்ட்ரோலாக இருந்தேன்' என தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

First published:

Tags: Anchor Rio, Anitha sampath, Bigg Boss Tamil 4