Bigg Boss Tamil 4 | நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன் என சீரிய ஆரி.. நீண்டநேரம் பேசியபின்பும் ஸ்பேஸ் இல்லை என்ற அனிதா..

தேவையில்லாம குரூப்பிஸம்ன்னு இருக்கக் கூடாதுன்னு தான் நம்ம எல்லாருமே நினைக்கிறோம். ஆனா அதையும் மீறியே பேவரிஸமாக ஒரு சில இடத்துல பண்றோம். அத நான் ஸ்ட்ரைட் ஃபார்வார்டாவே சொல்றேன் என்கிறார் ஆரி.

Bigg Boss Tamil 4 | நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன் என சீரிய ஆரி.. நீண்டநேரம் பேசியபின்பும் ஸ்பேஸ் இல்லை என்ற அனிதா..
ஆரி
  • News18
  • Last Updated: October 30, 2020, 1:34 PM IST
  • Share this:
பிக்பாஸ் 4-வது சீசனில் 26-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை இல்லாத வகையில் 11 பேர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இன்றுடன் வாக்குகள் அளிப்பது நிறைவடைய இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், ஆரி கோவமாக பேசுவது காட்டப்பட்டுள்ளது. அதில் பிக் பாஸ் வொர்ஸ்ட் பெர்ஃபார்மென்ஸ்ல என்னையும் அனிதாவையும் செலக்ட் பண்ணிருக்காங்கள் என ஆரி கூறுகிறார். 

தேவையில்லாம குரூப்பிஸம்ன்னு இருக்கக் கூடாதுன்னுதான் நம்ம எல்லாருமே நினைக்கிறோம். ஆனா அதையும் மீறியே பேவரிஸமாக ஒரு சில இடத்துல பண்றோம். அத நான் ஸ்ட்ரைட் ஃபார்வார்டாவே சொல்றேன் என்கிறார் ஆரி. மேலும் “யார் யாரு எங்க என்னென்ன செய்றீர்கள், என்ன பேசுறீங்கன்னு ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லி, நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன்” என்கிறார். இதனால் ரியோ, அர்ச்சனா, பாலாஜி உள்ளிட்டோர் அப்படியானால் இப்போதே கூறி விடுங்கள் என்கின்றனர். அனிதா மற்றும் ஆரி சிறைக்கு செல்ல தேர்வான நேரத்தில் இந்த வாக்குவாதம் நடைபெறுவது தெரிகிறது.

மீண்டும் தொடங்கிய தங்கமே உன்னை தான் டாஸ்க் : 


பிக் பாஸ் வீட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  "தங்கமே உன்னை தான்" டாஸ்க் நேற்று மீண்டும்ஆரம்பித்தது. இந்த டாஸ்கில் அர்ச்சனா, ரியோ, பாலாஜி , சோம் உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் மீதமிருப்பவர்கள் இவர்ககுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பது தான் டாஸ்க். வெற்றி பெற்றவர்கள் சக ஹவுஸ் மேட்ஸ்களுக்கு வேடிக்கையான தண்டனைகள் வழங்கி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். நேற்று அர்ச்சனாவுக்கு பல் தேய்ச்சுவிட்டுட்டு இருந்தாங்க நிஷா. பின்னர் வெற்றி பெற்ற அணியினரை புகழ்ந்து பேசனும் என பிக் பாஸ் அறிவித்தார். ரியோ விடாமுயற்சிக்கு சொந்தக்காரன்னு சொல்லிட்டு போனாங்க ரம்யா. 

பாலாஜி - சனம் மோதல் : 

அடுத்ததாக வந்த சனம், அர்ச்சனா என்ன கேட்டாலும் தருவாங்க என்றார். அப்போது குறுக்கிட்ட பாலாஜி ஆனா கடந்த வாரம் அரை எலும்பிச்சம்பழம் கேட்ட போது தரவில்லை என கூறினீர்கள் என்று போட்டு கொடுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த சனம், உங்க கிட்ட சொன்னதை நீங்க ஏன் பொதுவுல சொன்னீங்கனு சண்டை போட்டார். இதனால் பாலா டென்சனாகி மைக்கை கழட்டிட்டு சனமை நோக்கி போன பின்னர் சற்று அமைதியானார். இதனை தொடர்ந்து நிஷா மட்டுமே இதுவரை அம்மியில் அரைப்பதாக கருதிய பாலா தானும் அம்மி அரைக்கிறேன் என அரைக்க பழகினார். பின்னர் ஷிவானி, ரம்யா ஆகியோரும் அம்மியில் அரைத்தார்கள். அப்போது அங்கிருந்த வேல்முருகன் பாடல் பாடினார். 

Also read... Gold Rate | மூன்றாவது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?கண் கலங்கிய போட்டியாளர்கள் : 

இதனிடையே "இந்த வீட்ல நீங்க தனிச்சு விடப்பட்ட தருணங்கள்ல உங்களுக்கு யார் நினைவு வந்தது, யாரை மிஸ் பண்ணுனீங்க?" அதை பத்தி பேசனும்ங்கறது தான் டாஸ்க். முதல்ல ரம்யா ஆரம்பித்த நிலையில், அர்ச்சனா சுத்தி போடும் போது அம்மா ஞாபகம் வந்ததுனு சொல்லிட்டு அழுத்தார்.  பின்னர் வந்த அர்ச்சனா, சம்யுக்தா, சுரேஷ், ரியோ, நிஷா ஆகியோர் தனது குடும்பத்தினரை மிஸ் பண்ணுவதாக கூறி கண்கலங்கினர். 

இதனை தொடர்ந்து பேசிய அனிதா, அவங்க கணவரை பத்தி பேச ஆரம்பித்தார். நீண்ட நேரம் பேசியதால் ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் நெளிய ஆரம்பிச்சாங்க. ஆனாலும் அனிதா பேசிட்டேதான் இருந்தாங்க. ரம்யா, பாலா, ஷிவானி எல்லாரும் தலையை குனிஞ்சுட்டு சிரித்து கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத சம்யுக்தா , அனிதா குறுக்கிடுவதற்கு மன்னித்து கொள்ளுங்கள் ஆனால் ரொம்பநேரம் ஆகிவிட்டது என கூறினார் இதனால் அனிதா ஒரு சில வார்த்தைகள் கூறிவிட்டு முடித்து கொண்டார். பின்னர் இறுதியாக சம்யுக்தாவிடம் வாக்குவாதம் செய்தார் நீங்கள் நிறுத்தியதால் என் அம்மாவை பற்றி கூற முடியவில்லை என, மேலும் எனக்கு பேசறதுக்கு ஸ்பேஸ் கிடைக்கலனு சொன்னார். நீண்ட நேரம் பேசிய பின்னரும் அனிதா அவ்வாறு கூறியதை தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். 
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading