கொரோனாவிலிருந்து மீண்ட விஜய்யின் தமிழன் பட இயக்குநர் - மருத்துவச் செலவுகளை ஏற்ற தயாரிப்பாளர்கள்

இயக்குநர் மஜித் | தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் மஜீத்தின் மருத்துவ செலவுகளை பிரபல தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் செலுத்தியுள்ளார்.

 • Share this:
  2002-ம் ஆண்டு விஜய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படம் தமிழன். இந்தப் படத்தை அப்துல் மஜீத் இயக்கியிருந்தார். இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததில் குணமடைந்துள்ளார்.

  ஆரம்பத்தில் ரூ.2.85 லட்சம் தொகையை கட்டணமாக செலுத்தச் சொன்ன அந்தத் தனியார் மருத்துவமனை அவர் நலம் பெற்று வீடு திரும்பும் போது ரூ.4.85 லட்சம் சிகிச்சைக் கட்டணமாக  தெரிவித்துள்ளது. இதையடுத்து மஜித்தின் மனைவி நண்பர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த உதவி கோரியுள்ளார்.

  இதை அறிந்த கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ், ஐசரி கணேஷ், டி.சிவா உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் இணைந்து மஜித்தின் மருத்துவ செலவுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனர். அதற்காக மஜித் ராஜேஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  இயக்குநர் மஜித் கடைசியாக சதா நடித்த டார்ச்லைட் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதேபோல் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர், சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா, விஜய்சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார்.

  மேலும் படிக்க: கரகாட்டக்காரன் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவு - வெங்கட் பிரபு மகிழ்ச்சி
  Published by:Sheik Hanifah
  First published: