ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதி பிறந்தநாளில் 'மாஸ்டர்' செகண்ட் லுக் - படக்குழு திட்டம்!

விஜய் சேதுபதி பிறந்தநாளில் 'மாஸ்டர்' செகண்ட் லுக் - படக்குழு திட்டம்!

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

  அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் படப்பிடிப்பு முடிந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது. மாஸ்டர் என்று பெயருடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் மட்டுமே இடம் பெற்றிருந்தார். விஜய் சேதுபதியின் பெயர் மட்டுமே அந்தப் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.

  மாஸ்டர்

  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து செகண்ட் லுக்கில் விஜய் சேதுபதி தோன்றுவார் என்றும், விஜய் சேதுபதியின் பிறந்தநாளான ஜனவரி 16-ம் தேதியில் செகண்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி வெளியானால் அது நிச்சயம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இணைந்திருப்பதாலும், விஜய் சேதுபதி இப்படத்தில் இடம்பெற்றிருப்பதாலும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  மேலும் படிக்க: கல்யாண பரிசு சீரியல் நடிகைக்கு டும் டும் டும்! - வைரலாகும் வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Master