ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'3 நாட்களை குறித்து வைக்கவும்'.. தளபதி 67 குறித்த அதிரடி அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

'3 நாட்களை குறித்து வைக்கவும்'.. தளபதி 67 குறித்த அதிரடி அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

Thalapathy 67 : கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மைக்கேல் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சந்தீப் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் படம் உருவாகியுள்ளது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதோடு ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யங்கா கவுசிக் நடித்துள்ளார். இவர்களுடன் கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் ப்ரமோஷன் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதன் ஒருபகுதியாக,

கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மைக்கேல் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சந்தீப் கலந்து கொண்டனர். அப்பொது பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தளபதி 67 படத்தில் அப்டேட் குறித்து மாணவர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், '' பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்டேட் வருகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்'' எனத் தெரிவித்தார். இதனைக் கேட்டதும் மாணவர்கள் கரவோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.


First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj