ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'பிரச்னை வரக்கூடாது.. சரி பாதியா தியேட்டர ஒதுக்குங்க'.. துணிவு - வாரிசு படத்துக்காக தீயாய் வேலைபார்க்கும் விநியோகஸ்தர்கள்!

'பிரச்னை வரக்கூடாது.. சரி பாதியா தியேட்டர ஒதுக்குங்க'.. துணிவு - வாரிசு படத்துக்காக தீயாய் வேலைபார்க்கும் விநியோகஸ்தர்கள்!

விஜய்-அஜித்

விஜய்-அஜித்

துணிவு திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒப்பந்த பணி 40 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இதனால் அதிக திரையரங்குகளில் துணிவு திரைப்படம் வெளியாகும் சூழல் இருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் நடித்துள்ள துணிவு படம் வெளியாகும் அதே ஜனவரி 11ம் தேதி விஜயின் வாரிசு படமும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் திரையரங்குகளை ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்களான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். அதேநேரம் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை தமிழகத்தின் அனைத்து விநியோக ஏரியாக்களிலும் ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல் வாரிசு படத்தின் தமிழக உரிமை, மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கொடுக்கப்பட்டது. அதில் இருந்து 5 ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

துணிவு திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒப்பந்த பணி 40 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இதனால் அதிக திரையரங்குகளில் துணிவு திரைப்படம் வெளியாகும் சூழல் இருந்தது. இதனால் வாரிசு திரைப்படத்திற்கு குறைந்த திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இரண்டு படங்களுக்கும் சமமான எண்ணிகையில் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் கூறி வந்தனர். தமிழகத்தில் இரண்டு திரைப்படங்களும் சமமான திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தலைமை கூறியுள்ளது. இந்த நிலையில், துணிவு படத்திற்கு ஒப்பந்தம் செய்த சில திரையரங்குகள் தற்போது வாரிசு படத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு திரைப்படங்களும் தலா 480 திரையரங்குகளில் வெளியாகும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறுகின்றனர். அதேபோல் ஒரு திரையரங்கு மட்டுமே உள்ள ஊர்களில் வாரிசுக்கு இரண்டு காட்சிகளும், துணிவுக்கு இரண்டு காட்சிகளும் ஒதுக்கப்படுகின்றன.


First published:

Tags: Thunivu, Varisu