இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர் அமீனும், தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்யும் வீடியோ காலில் பேசிக் கொண்ட படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தனர். விக்ரம், ஷங்கர், ரஹ்மான் வெற்றி கூட்டணியைப் போல, அவர்களது வாரிசுகளின் நட்பும் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.அமீனும், விஜய்யின் மகன் சஞ்சய்யும் வீடியோ காலில் உரையாடியிருக்கிறார்கள். இந்த நிகழ்வும் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. சமீபத்தில், ஏ.ஆர்.அமீன் தனது பாட்டி கரீமா பேகத்தை இழந்திருக்கிறார். அதனால் தனது நண்பனுக்கு அழைப்பு விடுத்த சஞ்சய், இரங்கல் தெரிவித்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
ஓ காதல் கண்மணி படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஏ.ஆர்.அமீன், பிற இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திலும் அமீன் பாடியுள்ளார். மறுபுறம் சஞ்சய் சிரி என்ற குறும்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். விஜய் - ரஹ்மான் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன. அவர்களின் வாரிசுகள் நண்பர்களாக இருப்பதில் ஆச்சர்யமில்லை.
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.