தீபாவளியன்று ‘மாஸ்டர்’ டீசர் ரிலீசாகிறதா?

தீபாவளியன்று ‘மாஸ்டர்’ டீசர் ரிலீசாகிறதா?

மாஸ்டர்

தீபாவளிக்கு விஜ்ய ரசிகர்களுக்கு விருந்தாக மாஸ்டர் பட டீசர் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’.அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திரையரங்கில் படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்தது படக்குழு. இந்நிலையில் நேற்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருப்பதால் ‘மாஸ்டர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் லலித்குமார் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்தார்.

இந்நிலையில் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட முடியும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

பொங்கலுக்கு 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. எனவே தீபாவளிக்கு டீசரையும், படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட பின் ட்ரெய்லரையும் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: யார்க்கர் கிங் நடராஜனை பாராட்டிய நயன்தாரா

‘மாஸ்டர்’ திரைப்படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: