பாவக்கதைகள் பார்த்துவிட்டு சாந்தனுவை பாராட்டிய விஜய்

பாவக்கதைகள் பார்த்துவிட்டு சாந்தனுவை பாராட்டிய விஜய்

விஜய்

பாவக்கதைகள் ஆந்தாலஜியைப் பார்த்த நடிகர் விஜய் சாந்தனுவை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜியை உருவாக்கியுள்ளனர். ஆணவக்கொலை, சாதி பெருமை, தன் பாலின ஈர்ப்பு என ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

பாவக்கதைகள் படத்தில் சுதா கொங்கராவின் ‘தங்கம்’ கதையில் சாந்தனு தங்கம் எனற கேரக்டரிலும் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராமும் நடித்திருந்தனர். இதில் பெண் தன்மையுடன் தோன்றிய சத்தார் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் பாவக்கதைகள் பார்த்துவிட்டு தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக கூறியிருக்கும் நடிகர் சாந்தனு, இதுதான் புது சாந்தனுவா என்று தன்னிடம் விஜய் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். ‘தங்கம்’ குழுவினருடன் லைவில் பேசும் போது நடிகர் சாந்தனு இத்தகவலை தெரிவித்துள்ளார். அப்போது காளிதாஸ் ஜெயராம் விஜய் குரலில் மிமிக்ரி செய்திருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.



இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. விஜய் உடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்திருக்கும் சாந்தனு அந்தப் படத்தின் ர்லீசுக்காக காத்திருக்கிறார்.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: