Exclusive: விஜய்யுடன் அடுத்த படமா? - மெர்சல் தயாரிப்பாளர் பதில்

Exclusive: விஜய்யுடன் அடுத்த படமா? - மெர்சல் தயாரிப்பாளர் பதில்

தயாரிப்பாளர் முரளி | நடிகர் விஜய்

தேனாண்டாள் ஃபிலிம்ஸ்க்கு விஜய் படம் நடித்துக் கொடுப்பார் என்பது மெர்சல் வந்த நேரத்தில் முடிவு செய்யப்பட்டது என்று தயாரிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார்.

  • Share this:
விஜய் நடிப்பில் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் சன் பிக்சர்ஸ் உடன் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் விலகியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது விஜய்க்கு 65-வது படம் என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 65’ என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். தற்போது இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’ திரைக்கு வந்ததும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனது 65-வது படத்தை அடுத்து செவன் ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் இருக்கிறது. அதே நேரம் சமீபத்தில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்க்காக விஜய் படம் நடிக்கிறார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதுகுறித்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளியிடம் கேட்டபோது, எங்கள் நிறுவனத்துக்காக விஜய் படம் நடித்துக் கொடுப்பார் என்பது மெர்சல் நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இப்போது ஏன் அது மீண்டும் புகைகிறது என தெரியவில்லை. ஆனால் எந்தப் படம் என்பது இன்னும் முடிவாகவில்லை”என்றார்.

மேலும் படிக்க: வலிமை பட இயக்குநரை சந்தித்த மாஸ்டர் டைரக்டர் - லைக்ஸ் அள்ளும் பதிவு

எனவே தற்போதைக்கு தேனாண்டாள் நிறுவனத்துடன் விஜய் ஒரு படம் நடிக்க இருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. 65-வது படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பின்னர்தான் விஜய் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பார் என தெரிகிறது.
Published by:Sheik Hanifah
First published: