ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலக அளவு வசூலில் முதலிடம் - ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்!

உலக அளவு வசூலில் முதலிடம் - ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான பெரிய நட்சத்திரத்தின் படமான ’மாஸ்டர்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் உலக அளவிலான வார இறுதி நாட்களில் அதிக வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நடிகர் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

கடந்த வருடம் ஏப்ரலில் வெளியாக வேண்டிய இப்படம், கொரோனா பிரச்னைகளால் தள்ளிப் போனது. பின்னர் கடந்த நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான பெரிய நட்சத்திரத்தின் படமான ’மாஸ்டர்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் ‘எ லிட்டில் ரெட் பிளவர்’ என்கிற ஹாலிவுட் படம் 11.75 மில்லியன் டாலரை மட்டுமே வசூலித்துள்ளது.

பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor vijay, Actor vijay sethupathi