மாஸ்டர் டீம் கொண்டாடிய பொங்கல்- பாரம்பரிய உடையில் அசத்திய விஜய்

மாஸ்டர்

தமிழகத்தில் முதல் நாள் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 • Share this:
  கடந்த வருடம் மாஸ்டர் குழுவினரின் பொங்கல் கொண்டாட்ட வீடியோவை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  நடிகர் விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வந்தது.

  இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது.  10 மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பொங்கல் திருவிழாவோடு சேர்த்து கொண்டாடினர். அதோடு படம் தமிழகத்தில் முதல் நாள் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  இந்நிலையில், கடந்தாண்டு மாஸ்டர் டீம் கொண்டாடிய பொங்கல் கொண்டாட்ட வீடியோ வெளியாகியுள்ளது. குழுவினர் அனைவரும் பாரம்பரிய உடையில் இருக்கிறார்கள். வெள்ளை வேட்டி சட்டையில் டக்கராக இருக்கிறார் விஜய். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: