ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'மாஸ்டர்' படத்தைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் - இயக்குநர் மிஷ்கின்

'மாஸ்டர்' படத்தைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் - இயக்குநர் மிஷ்கின்

விஜய் - மிஷ்கின்

விஜய் - மிஷ்கின்

ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் 'மாஸ்டர்' படத்தைப் பார்க்க தனிப்பட்ட முறையில் நான் ஆவலுடன் இருக்கிறேன்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜனவரி 13-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்க காத்திருப்பதாக இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இயக்குநர் மிஷ்கின் தனது வரவிருக்கும் 'பிசாசு 2' திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் ராஜ்குமார் பிச்சுமணி நடிக்கும் இந்தப் படம், 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற பிசாசு படத்தின் தொடர்ச்சியாகும்.

  தவிர, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள, விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை திரையரங்குகளில் பார்த்து, திரைப்படங்கள் மற்றும் திரையுலகத்தை ஆதரிக்கும்படி, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மிஷ்கின்.

  "கதைகள் மற்றும் திரைப்படங்கள் இல்லாமல், நமது வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கும். குடும்பங்களுடன் மீண்டும் தியேட்டர்களுக்கு வருவோம். ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் 'மாஸ்டர்' படத்தைப் பார்க்க தனிப்பட்ட முறையில் நான் ஆவலுடன் இருக்கிறேன். திரைத்துறை மீண்டும் செழிக்க,  திரையரங்குகளுக்கு வந்து உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்." என மிஷ்கின் ட்வீட் செய்துள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Director mysskin, Master