Vijay - Gautham Menon: விஜய்யுடன் விரைவில் கைகோர்க்கும் கெளதம் மேனன்?!

Vijay - Gautham Menon: விஜய்யுடன் விரைவில் கைகோர்க்கும் கெளதம் மேனன்?!

கெளதம் மேனன் - விஜய்

விஜய்க்கு நெருக்கமான ஒருவர், அவருக்காக ஒரு ஸ்கிரிப்டைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

  • Share this:
    இயக்குநர் கெளதம் மேனன், தளபதி விஜய் இருவருமே தனித்தனியாக பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்த போதிலும், அவர்கள் இருவரும் கைவிட்ட 'யோஹன்: அத்தியாயம் ஒன்று’ படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்நிலையில் திரையுலகில் 20 வருடங்களை நிறைவு செய்த கெளதம் மேனன், பிரபல தமிழ் ஊடகத்துடன் பேசுகையில், விஜய்க்கு நெருக்கமான ஒருவர், அவருக்காக ஒரு ஸ்கிரிப்டைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

    மாஸ் லுக்கில் விஜய் – தளபதி 65 அட்டகாச அப்டேட்!

    சுவாரஸ்யமாக, 'காக்க காக்க' படத்தில் அன்புசெல்வனாக சூர்யாவின் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யோஹன் படத்திற்காக படத்திற்காக விஜய்யை அணுகியபோது, படத்தின் ஸ்கிரிப்ட்டில் 75 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்துள்ளதால், இந்த திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு முழு பவுண்டட் ஸ்கிரிப்டையும் விஜய் கேட்டதாகவும், ஸ்கிரிப்டை முடிக்கும்படி கெளதமிடம் அவர் கேட்டுக் சொன்னதாகவும் தெரிகிறது.

    வயசுங்கறது வெறும் நம்பர் தான் – நதியாவின் ’வாவ்’ படங்கள்!

    விஜய்யுடன் பணிபுரிவது பற்றி பேசிய கெளதம், ”அவருக்கு நெருங்கிய ஒருவர் விஜய்காக ஸ்கிரிப்டைத் தயாரிக்கக் கேட்பது குறித்து அவருக்கு தெரியுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை என்றாலும், அவர்கள் விரைவில் இணைந்து பணியாற்ற நம்பிக்கைக் கொண்டிருப்பதாக” கூறினார்.

    விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: