முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Exclusive | சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்கும் விஜய் - அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

Exclusive | சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்கும் விஜய் - அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

விஜய்

விஜய்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போகும் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அட்லீக்கு 3 படங்களில் வாய்ப்பு கொடுத்த நடிகர் விஜய் தனது 64-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு கொடுத்தார். மாஸ்டர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இதுவரை நடித்திராத கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அவ்வப்போது தீனி போட்டு வரும் படக்குழு சமீபத்தில் குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது. இளைஞர்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் பாடல் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்களும் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன.

அதன்படி முதலில் இயக்குநர் பேரரசின் பெயர் அதைத்தொடர்ந்து பைரவா பட இயக்குநர் பரதன், பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜா உள்ளிட்டோரில் ஒருவர் தான் விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

அதன்படி விஜய்யின் 65-வது படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்க உள்ளார். விஜய் மாஸ்டர் திரைப்படத்தை முடிக்க வேண்டிய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் சுதா கொங்கரா சூரரைப் போற்று திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே நடிகர் விஜய்க்கு சுதா கொங்கரா கூறிய ஒன் லைன் பிடித்துப் போக, கதையை முழுவதும் கேட்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார். எனவே சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க: மீண்டும் அஜித்துடன்... வலிமை படம் குறித்து ரகசியம் உடைத்தார் யோகி பாபு!

First published:

Tags: Actor vijay