Thalapathy 66: தளபதி 66 இயக்குநர் யார்? விஜய் படத்தை இயக்க கடும் போட்டி!

நடிகர் விஜய்

விஜய்யின் அடுத்தப்படமான தளபதி 66-ஐ இயக்குவதற்கு இயக்குநர்களிடையே கடும் போட்டி நிலவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குவதற்கு இயக்குநர்களிடையே கடும் போட்டி நிலவியுள்ளது.

    பொங்கலுக்கு வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    இதையடுத்து அவரின் 65-வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து விஜய்யின் அடுத்தப்படமான தளபதி 66-ஐ இயக்குவதற்கு இயக்குநர்களிடையே கடும் போட்டி நிலவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தளபதி 66 படத்தை இயக்க, லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், அட்லீ, அஜய் ஞானமுத்து (கோப்ரா பட இயக்குநர்) ஆகிய நான்கு பேரிடையே கடும் போட்டி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: