HOME»NEWS»ENTERTAINMENT»thalapathy 65 villain arun vijay to play opposite to vijay in his next scs

தளபதி 65-ல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ?

படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவின் பெயர் அடிபடுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தளபதி 65-ல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ?
விஜய்
  • Share this:

விஜய்யின் அடுத்தப் படமான ’தளபதி 65’வில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான பெரிய நட்சத்திரமான மாஸ்டர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

நடிகர் அருண் விஜய்




இதையடுத்து நெல்சன் திலீப்குமாரின் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய். ’தளபதி 65’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசை அனிருத். இதன் முதற்கட்ட பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவின் பெயர் அடிபடுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தளபதி 65 படத்தில், விஜய்க்கு வில்லனாக நடிக்க அருண் விஜய்க்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் இதற்கு முன்பு ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மாஸ்டரில் விஜய் - விஜய் சேதுபதி, தளபதி 65-ல் விஜய் - அருண் விஜய் என பெயர் பொருத்தத்தைப் பார்க்க தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள்!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: