மாஸ் லுக்கில் விஜய் - தளபதி 65 அட்டகாச அப்டேட்!

மாஸ் லுக்கில் விஜய் - தளபதி 65 அட்டகாச அப்டேட்!

விஜய்

’தளபதி 65’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 • Share this:
  தியேட்டர்களில் ஐம்பது சதவிகித இருக்கை கட்டாயமாக இருந்தபோதிலும், விஜய்யின் 'மாஸ்டர்' பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றது.

  அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியான இந்தப் படம், 2021 ஆம் ஆண்டின் முன்னணி இந்திய சினிமா வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ’தளபதி 65’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

  Thalapathy 65, Thalapathy Vijay
  இயக்குநர் நெல்சன்


  இப்போது இந்தப் படம் குறித்த அப்டேட் என்னவென்றால், 'தளபதி 65' படத்திற்கான போட்டோஷூட்டில் விஜய் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது சென்னையில் உள்ள சன் குழுமத்தின் ஸ்டுடியோவில் நடந்துள்ளது. சன் நெட்வொர்க் ஊழியர்களுடன் நெல்சன் திலீப்குமார் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஒரு மாஸ் லுக் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதைப் பார்த்து இயக்குநரும் படக்குழுவினரும் திகைத்துப்போனதாகவும் கூறுகிறார்கள்.

  ”ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொள்ளும் போது விஜய்யைப் பற்றி நினைத்தேன்…” பிரியங்கா சோப்ரா!

  அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் ‘தளபதி 65’படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தன்னா ஆகியோர் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யோகி பாபு மற்றும் புகழ் ஆகியோரும் இந்த படத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: