ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘தளபதி 65’ படம் குறித்த அசத்தலான புதிய அப்டேட்

‘தளபதி 65’ படம் குறித்த அசத்தலான புதிய அப்டேட்

விஜய் உடன் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் உடன் ஏ.ஆர்.முருகதாஸ்

‘தளபதி 65’ படத்துக்கான ஒப்பந்தத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. கொரோனா பிரச்னை முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்படும் போது படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இது அவர் நடிக்கும் 65 வது படம் என்பதால் ‘தளபதி 65’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி உறுதியாகிவிட்டாலும் மாஸ்டர் வெளியானவுடன் இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி ‘தளபதி 65’ படத்துக்கான ஒப்பந்தத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

    துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணி மீண்டும் 4-வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: A.R.murugadoss, Actor vijay