Home /News /entertainment /

வெளியானது தளபதி64 படத்தின் முக்கிய அப்டேட்..! விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு

வெளியானது தளபதி64 படத்தின் முக்கிய அப்டேட்..! விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு

விஜய் நடிக்கும் தளபதி64 படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முக்கிய தகவல் வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Thalapathy 64

அடுத்த செய்தி