பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ராம் சினிமாஸ் திரையரங்கில் காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அதற்காக டிக்கெட் இலவசம் என்றும் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.