• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’விஜய் 63’ நியூ அப்டேட்: 5-வது முறையாக விஜய் படத்தில் இணைந்த பிரபலம்

’விஜய் 63’ நியூ அப்டேட்: 5-வது முறையாக விஜய் படத்தில் இணைந்த பிரபலம்

விஜய் 63 படக்குழு

விஜய் 63 படக்குழு

விஜய் 63 படத்தின் போஸ்டர் டிசைனராக கோபி பிரசன்னா இணைந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஜய் 63 படத்தின் போஸ்டர் டிசைனராக கோபி பிரசன்னா இணைந்துள்ளார்.

    சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கபட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதேபோல் சிம்டாங்காரன் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார். மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் 63 படத்தின் போஸ்டர் டிசைனராக கோபி பிரசன்னா இணைந்துள்ளார். இவர் ஏற்கெனவே விஜய் நடித்த கத்தி, தெறி, மெர்சல், சர்கார் ஆகிய நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது 5-வது முறையாக நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார்.



    இவர் அஜித்தின் விவேகம், விஜய் சேதுபதியின் சீதக்காதி உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் டிசைனராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பெண் காவலருக்கு முத்தம்... காவல் நிலையமா? காதல் நிலையமா? - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: