Home /News /entertainment /

விஜய் சேதுபதியை வியந்து புகழ்ந்த ’தளபதி 63' பட தயாரிப்பாளர்

விஜய் சேதுபதியை வியந்து புகழ்ந்த ’தளபதி 63' பட தயாரிப்பாளர்

அர்ச்சனா கல்பாத்தி

அர்ச்சனா கல்பாத்தி

சூப்பர் டீலக்ஸ் படத்தைப் பார்த்த ‘விஜய் 63’ பட தயாரிப்பாளர், இந்த தலைமுறையின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விஜய் சேதுபதி என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ஆரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படம் வெளியான முதல்நாளன்றே படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி உட்பட அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி


ரம்யா கிருஷ்ணன்


இந்தநிலையில் படம் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் விஜய் 63 பட கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “சூப்பர் டீலக்ஸ் படத்தின் கதைக்களம் நடிகர்கள் தேர்வு, படமாக்கிய விதம் அனைத்தும் பிடித்திருந்தது. சமந்தாவின் நடிப்பை பார்த்து ரசித்தேன். இவை அனைத்தும் தியாகராஜன் குமாரராஜாவாகிய உங்களால் தான் நடந்தது” என்று கூறியுள்ளார்.





மீண்டும் கிசு கிசுவில் சிக்கிய விஜய்! - வீடியோ

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay sethupathi, Super Deluxe

அடுத்த செய்தி