புரட்சித்தலைவர், மக்கள் திலகம் போன்ற பெயர்களால் அறியப்பட்ட எம்.ஜி.ஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரின் அன்பான நினைவாக நடிகர் அரவிந்த் சாமி, தான் நடித்துவரும் எம்.ஜி.ஆர் காதாபாத்திரத்தின் புதிய தோற்ற போஸ்டர்களை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.
அதில் அவர் குறிப்பிட்டிருந்தாவது, "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பாத்திரத்தில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பு. இயக்குநர் ஏ.எல். விஜய், தயாரிப்பாளர்கள் விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோர் என்னை நம்பியதற்காக நன்றி கூறுகிறேன். இந்தப் படங்களை தலைவரின் நினைவாக தாழ்மையுடன் பதிவிடுகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி திரைப்படம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இதில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நபராக இருந்தார்.
Also read: விஜய்யின் ‘மாஸ்டர்’ சென்சார் அப்டேட் - ரசிகர்கள் குஷி
அதன்படி, தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் காதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அரவிந்த் சுவாமி, எம்.ஜி.ஆர் தோற்றத்தில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏற்கனவே படக்குழு பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைவி படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் நிலையில், அரவிந்தசாமி மேலும் சில தோற்றங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்தவர். 1972ல் அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் (திமுக) இருந்து விலகிய பின்னர், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) உருவாக்கி 1977-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1987 டிசம்பரில் தனது உயிர் பிரியும் வரை அவர் தமிழக முதல்வராக பதவி வகித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்