ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் பட ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் பட ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

  அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக படத்தின் இயக்குநர் பழநி முருகன் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.

  ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தில் நிவேதா தாமஸ் ரஜினிகாந்தின் மகளாக நடிப்பதாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்த மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது, “தற்போது வரை இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா மட்டுமே தேர்வாகியுள்ளார். படக்குழு குறித்து வெளியான இதர தகவல்கள் தவறானவை. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

  இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 8.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

  வீடியோ பார்க்க: ஆதரிப்பதாக சொன்னவர் இன்னும் அமைதி காக்கிறார் - ரஜினி மீது கமல் வருத்தம்


  சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: A.R.murugadoss, Actress Nayantara, Rajinikanth