விஜயை தளபதி என்று அழைக்கலாமா?...உதயநிதி ஸ்டாலின் பதில்!

உதயநிதி ஸ்டாலின்| நடிக விஜய்

 • News18
 • Last Updated :
 • Share this:
  விஜயை தளபதி என்று அழைப்பதை, திமுக-வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று ட்விட்டரில் எழுந்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.

  தமிழக அரசியல் களத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தளபதி என்ற அடைமொழியுடன் தான் அழைத்து வருகிறார்கள். திமுக கட்சிக்கூட்டங்கள், அழைப்பிதழ்கள், போஸ்டர்கள் என அனைத்திலுமே தளபதி என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்றே அழைத்து வருகின்றனர். ஆனால் இளைய தளபதியாக இருந்த விஜய், சமீப காலமாக தளபதி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

  இந்நிலையில் நேற்று நடைபெற்ற சர்கார் இசைவெளியீட்டு விழாவில் இந்த தளபதி விவகாரத்தை ராதாரவி, கலாநிதிமாறன் உள்ளிட்டோர் திறமையாக கையாண்டனர். இதைத்தொடர்ந்து, விஜயயை தளபதி என்று அழைப்பதை, திமுக-வினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள். பார்த்து செய்யுங்க சார் என்று ரசிகர் ஒருவர் உதயநிதிஸ்டாலினை டேக் செய்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

  இதற்கு உதயநிதிஸ்டாலின், ``ஆம். திரையுலக தளபதி விஜய் அண்ணா. திரையுலக தல அஜித் சார். சரி தான்’’ என்று கூறியுள்ளார்.

  Published by:Sheik Hanifah
  First published: