ஒரு வழியாக ’வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்! மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

ஒரு வழியாக ’வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்! மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

போனி கபூர் - அஜித்

இறுதியாக ஒரு வருடம் கழித்து வலிமை படம் பற்றி கிடைத்த இந்த அப்டேட் ரசிகர்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.

 • Share this:
  அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. அதன் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

  இருப்பினும், நீண்ட காலமாக இந்தப் படம் தொடர்பாக தயாரிப்பாளர்களிடமிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் தொடர்ந்து குழுவினரிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர். இறுதியாக, படம் குறித்த சமீபத்திய தகவல் ரசிகர்களுக்கு புன்னகையை ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தின் தயாரிப்பாளர், போனி கபூர் ஒரு ஆன்லைன் போர்ட்டலுடனான உரையாடலில் படம் குறித்த சில விவரங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

  அஸ்வினுக்கு லவ் புரபோஸல் – வயிற்றெரிச்சலில் சிவாங்கி

  வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு சண்டைக் காட்சியைத் தவிர, பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் 'வலிமை' படப்பிடிப்பு நிறைவடையும் என்று போனி கபூர் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளன. இருப்பினும் தயாரிப்பாளர்கள் வெளியீட்டு தேதியை இன்னும் இறுதி செய்யவில்லை. இறுதியாக ஒரு வருடம் கழித்து வலிமை படம் பற்றி கிடைத்த இந்த அப்டேட் ரசிகர்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது. மேலும் வரவிருக்கும் நாட்களில் சில பெரிய அப்டேட்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  'வலிமை' படத்தில் அஜித் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும் அதிரடி நிறைந்த இந்தப் படத்தில் உணர்ச்சிகரமான கூறுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா, சுமித்ரா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் இதனை தயாரிக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: