• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தல அஜித் செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்த பாலிவுட் நடிகை!

தல அஜித் செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்த பாலிவுட் நடிகை!

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாலிவுட் நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் போது, இங்குள்ள முன்னணி ஹீரோக்கள் மிகவும் பண்பானவர்கள் என பல முறை சொல்லிக் கேள்விப்பட்டு இருப்போம்.

    பல வருடங்களுக்கு முன்பு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் விஜயுடன் நடித்த காத்ரினா கைப், அவரை புகழ்ந்து பேசியது விஜய் ரசிகர்களால் கொண்டாப்பட்டது.

    தற்போது, அதே போன்று தல அஜித் குறித்து வித்யாபலன் கூறியது வைரலாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்து வருவகிறார்.

    இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்ட வித்யா பாலன், “ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் தனது காட்சிகள் முடிந்த உடன் வீட்டிற்குக் கிளம்பிவிடமாட்டார், படப்பிடிப்புத் தளத்திலேயே காத்திருந்து இணை நடிகர்களின் காட்சிகள் படப்பிடிப்பு முடிந்த உடன், அவர்களை வழி அனுப்பி விட்டுத்தான் கிளம்புவார்.

    வித்யா பாலன்


    ஒரு நாள் அஜித் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எனக்கு மட்டும் 3 காட்சிகள் எடுக்க வேண்டி பாக்கியிருந்தது. ஆனால் தனது வேலை முடிந்துவிட்டது என்று அஜித் வீட்டிற்குக் கிளம்பவில்லை. நான் நடிக்க வேண்டிய காட்சிகளும் முடிந்த பிறகு என்னை காரில் ஏற்றி அனுப்பிவிட்டுத் தான் அவர் வீட்டிற்கு கிளம்பினார். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது” என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: