• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’காணவில்லை...’ - வலிமை பட அப்டேட் கேட்டு போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்

’காணவில்லை...’ - வலிமை பட அப்டேட் கேட்டு போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்

போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்

போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படம் குறித்த அப்டேட் வெளிவராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்டேட் காணவில்லை என மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

  • Share this:
    நீண்ட நாட்களாக அஜித் திரைப்படத்தின் அப்டேட் வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்த அஜித் ரசிகர்கள் அடுத்த கட்டமாக தற்போது போஸ்டர் ஒட்ட துவங்கியுள்ளனர். அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. இந்தப் படத்திலும் அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணி தொடர்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகமுடியவில்லை.

    இந்நிலையில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய பின்னர் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், 2021-ம் ஆண்டின் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ALSO READ |  தீபாவளிக்கு ரிலிஸாகிறது மாஸ்டர் டீசர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    எனினும் இந்த தீபாவளிக்கு படம் வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை. அப்டேட்டாவது கொடுங்கள் என அஜித் ரசிகர்கள் இணையத்தில் போஸ்ட் செய்து வருகின்றனர்

     

     



     

     



     

     



     

     



     

     



     

     



    இது தொடர்பாக ட்விட்டரில் #WewantValimaiupdate என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே விஜய் நடிப்பில் திரைக்கு வெளிவரவுள்ள மாஸ்டர் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகுமென படக்குழு தெரிவித்து விட்டது. சிம்பு நடிப்பில் வெளிவரவுள்ள ஈஸ்வரன் திரைப்பட டீசரும் நாளை அதிகாலை வெளிவரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.



    ஆனால் வலிமை குறித்து எவ்வித அப்டேட்டும் கிடைக்காததால் அஜித் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். சிலர் ஒரு படி மேலே போய் அப்டேட் கேட்டு போஸ்டரே ஒட்டியுள்ளனர்.

    வலிமை திரைப்படத்தின் செய்திகள் வெளிவராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்டேட் காணவில்லை என மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

    ALSO READ |  நாளை அதிகாலை வெளியாகிறது சிம்புவின் ஈஸ்வரன் டீசர் - படக்குழு அறிவிப்பு

    வலிமை திரைப்படத்தில் , அஜித் காவல்துறை அதிகாரியாகவும் அவருக்கு ஜோடியாக ஹியூமா குரேஷியும் நடித்துவரும் வருகின்றனர். இந்த திரைப்படத்தில் உள்ள 5 பாடலில் ஒரு பாடலை யுவன்சங்கர் ராஜா முடித்துக் கொடுத்திருப்பதாகவும் அதை படக்குழு படமாக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை இந்தப் படத்தின் இரண்டு பாடல்களுக்கு யுவன் இசையமைத்து முடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: