• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 10,000 கி.மீ.க்கும் அதிகமாக பைக்கில் பறந்த அஜித் - நண்பர் வெளியிட்ட சீக்ரெட்

10,000 கி.மீ.க்கும் அதிகமாக பைக்கில் பறந்த அஜித் - நண்பர் வெளியிட்ட சீக்ரெட்

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

பத்தாயிரம் கி.மீ தூரத்துக்கும் அதிகமாக அஜித் பைக்கில் பயணித்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பைக் ரைடிங், போட்டோகிராபி, ஆளில்லா விமானங்களை தயாரித்தல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் அஜித் சமீபத்தில் பத்தாயிரம் கி.மீட்டருக்கும் அதிகமாக பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருக்கும் அஜித்தின் நண்பர் டினோஸ், “தல அஜித் வெற்றிகரகமாக பத்தாயிரம் கி.மீ.க்கும் அதிகமாக பயணம் செய்து முடித்திருக்கிறார். சென்னை - கோயம்புத்தூர்- சென்னை - ஹைதராபாத் - வாரணாசி - கேங்டாக் - லக்னோ - அயோத்யா - ஹைதராபாத் - சென்னை. அஜித் மிகவும் எளிமையானவர். அஜித்தின் பைக் ரைடர் பார்ட்னர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் சந்தித்துக் கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர் ஒருவர் அஜித்தின் பைக் பயணத்தை வீடியோவாக பதிவிட சொன்னதற்கு பதிலளித்த டினோஸ், "அதை எப்போதும் செய்யமாட்டோம். அவருக்கென ப்ரைவசி இருக்கிறது. அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவருடன் நான் பயணம் சென்ற போது எனது ஹெல்மெட்டில் கோப்ரோ (Go Pro) கேமரா பொருத்தவில்லை. இந்த புகைப்படங்கள் அஜித்தின் ஒப்புதலோடு பதிவேற்றியுள்ளேன். ஏனெனில் ஒரே கட்டமாக 10,000-க்கும் அதிகமான கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறார். சிலர் 5000 கி.மீ என்று யூகிக்கின்றனர். ஆனால் உண்மையில் அவரும் அவரது நண்பர்களும் 10 ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளனர். அஜித் தீவிரமான பைக் ரைடர்.” என்று கூறியுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Dinesh Kumar (@dinos_vault)






ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். விரைவில் படக்குழு வெளிநாடு சென்று மீதமிருக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: