‘தல 60’ படத்தின் பூஜை நாளை நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படத்திலும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதோடு சால்ட் அன்ட் பெப்பர் லுக்குக்கும் பை சொல்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நயன்தாரா இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுஒருபுறமிருக்க போனிகபூரின் தயாரிப்பில் மைதான் என்ற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ‘தல 60’ படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை காலை தல 60 படத்துக்கு பூஜை போடப்படுவதாக ட்விட்டரில் பலரும் தகவல் பரப்பி வருகின்றனர். சென்னையில் உள்ள போனி கபூரின் இல்லத்தில் படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், அதில் அஜித் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
எனவே விரைவில் ‘அஜித் 60’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ பார்க்க: இமான் இசையில் பாடப்போகும் திருமூர்த்தி
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.