முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’தல 60’: கெத்தான போலீஸ் கேரக்டரில் அஜித்?

’தல 60’: கெத்தான போலீஸ் கேரக்டரில் அஜித்?

அஜித்

அஜித்

மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • 1-MIN READ
  • Last Updated :

அஜித்தின் 60-வது படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்துக்கு நேர்கொண்ட பார்வை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் 60-வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்காக அஜித் தனது உடல் எடையைக் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சமூக அவலங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால், படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: தன்னிகரில்லா ‘தல’அஜித் அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநர்கள்!

First published:

Tags: Actor Ajith, Nerkonda Paarvai, Thala 60