ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸில் நடிப்புதான்... பணத்துக்காக நித்யா அப்படி பேசினார் - தாடி பாலாஜி

பிக்பாஸில் நடிப்புதான்... பணத்துக்காக நித்யா அப்படி பேசினார் - தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, “நித்யா உதவி ஆய்வாளர் மனோஜுடன் சேர்ந்து தனது குழந்தையின் வாழ்க்கையை சீரழிப்பதாக கூறினார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மனைவி நித்யாவால் தனது குழந்தையின் எதிர்காலம் பாழாவதாக நடிகர் தாடி பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

  சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, “நித்யா உதவி ஆய்வாளர் மனோஜுடன் சேர்ந்து தனது குழந்தையின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார்.

  தன் மன உளைச்சலுக்கு உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் காரணம். ஏற்கனவே மனோஜ் மீது கொடுத்த புகாருக்கு பழிவாங்க அவர் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

  போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை. மனோஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  என்னுடைய குடும்பம் ஒன்று சேர வேண்டும் என விஜய் டிவிக்கு எந்த நோக்கமும் இல்லை. நித்யா பிக்பாஸ் செட்டில் செய்தது அனைத்துமே நடிப்பு. பிக்பாஸ் செட்டிலிருந்து வந்த பின்னர் என்னுடைய அம்மா வீட்டிற்கு தான் சென்றேன். நித்யாவை பார்க்கச் செல்லவில்லை.

  பாலாஜியின் மனைவி நித்யா

  என் குழந்தையை பார்க்க விடவில்லை. பணத் தேவைக்காக மட்டுமே நித்யா பேசினார். என் குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒரு தந்தையாக செய்ய தான் தயாராக இருக்கிறேன். என் குழந்தைக்கு (போஷிகா) நித்யா மற்றும் உதவி ஆய்வாளர் மனோஜால் ஆபத்து உள்ளது.

  நடிகர் கமல்ஹாசன் குழந்தையின் படிப்பை கவனிக்கச் சொல்லி அறிவுரை கூறினார். போர்டிங் பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்கத் தயார்.

  நான் பணி நிமித்தமாக இருந்ததால் நித்யாவிற்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். நித்யா உடற்பயிற்சி பயிற்றுனர் ஃபயஸ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் கட்டுப்பாட்டில் இருக்கிறார்” என்று கூறினார்.

  தைரியம், தன்னம்பிக்கை, ஆளுமை - டிடிவி - நடிகர் ரஞ்சித் Trolls - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Bigg boss 2