முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராமனாக நடிக்க மறுத்த இளம் சூப்பர் ஸ்டார்...!

ராமனாக நடிக்க மறுத்த இளம் சூப்பர் ஸ்டார்...!

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

மகேஷ் பாபு தனக்கென தனித்த கொள்கைகள் கொண்டவர். அதில் ஒன்று பிற மொழிகளில் நடிப்பதில்லை என்பது.

  • Last Updated :

தங்கல் படத்தை இயக்கிய நித்தீஷ் திவாரி ராமாயண கதையை ராமாயணா 3டி என்ற பெயரில் இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் 3டி திரைப்படம் இது.

இந்தப் படத்தில் சீதையாக தீபிகா படுகோனும், ராவணனாக ஹிர்த்திக் ரோஷனும் நடிக்கின்றனர். ராமனாக நடிக்க தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் கேட்டிருந்தனர். மகேஷ் பாபு தனக்கென தனித்த கொள்கைகள் கொண்டவர். அதில் ஒன்று பிற மொழிகளில் நடிப்பதில்லை என்பது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல், ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதையும் கடைபிடித்து வருகிறார். விஜய்யின் துப்பாக்கி அவருக்கு மிகவும் பிடித்தமான திரைப்படம். ஆனாலும், ரீமேக்கில் நடிப்பதில்லை என்பதால், துப்பாக்கி ரீமேக் வாய்ப்பு வந்தும் நடிக்கவில்லை. அதுபோல் பல படங்கள். அவரது தந்தை கிருஷ்ணா, பாதாள பைரவி படத்தை இந்த காலகட்டத்துக்கு ஏற்ப எடுக்க வேண்டும், அதில் மகேஷ் பாபு நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளியிட்ட போது, அதற்கும் மறுப்பு தெரிவித்தார்.

Also read... விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2...!

ராமாணயா 3டி திரைப்படம் இந்தியில் தயாராகிறது. அதுவும் ஹிர்த்திக் ரோஷன் வேறு இருக்கிறார். இந்த காரணங்களால் நடிக்க முடியாது என கைவிரித்துள்ளார் மகேஷ் பாபு. அத்துடன், ராஜமௌலியின் அடுத்தப் படத்தில் அவர் நடிக்கயிருப்பதும் ஒரு காரணம்இப்போது, ராமனாக நடிக்க வேறு நடிகர்களை தேடி வருகிறார்கள்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Mahesh babu