தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி...

தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி...

ராம் சரண்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    ராம் சரண் தேஜா 2007 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. 2009 ஆம் ஆண்டு காஜல் அகர்வால் உடன் இணைந்து இவர் நடித்த ‘மகதீரா’என்ற வரலாற்று திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று தமிழிலும் ‘மாவீரன்’ என்று டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது.

    இதை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், இந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை ஆலிய பட், சமுத்திரக்கனி என பல நட்சத்திர பட்டாளமே உள்ளது. பாகுபலி திரைப்படத்தை போலவே பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்து கொள்ளுங்கள். சீக்கிரம் குணமடைந்து வருகிறேன். எனது உடல்நலம் மேம்படுவது குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் ’என பதிவிட்டுள்ளார்.

     



    இவரின் பதிவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் என கமெண்டில் கூறி வருகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Tamilmalar Natarajan
    First published: