Home /News /entertainment /

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு வில்லன் இவர்தான்?

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு வில்லன் இவர்தான்?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின்  ‘அண்ணாத்த’ படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்பார் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம்  ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, நடிகர் சூரி, சதிஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா மற்றும் புனேவில் நடத்த திட்டமிட்டிருந்த படக்குழு, கொரோனா அச்சத்தின் காரணமாக மீண்டும் ஹைதரபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் கோபிச்சந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

ஜெயம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த கோபிச்சந்த், தற்போது  ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: விஜய் சேதுபதி படத்திலிருந்து சமந்தா விலகல் - கர்ப்பம் தான் காரணமா?
Published by:Sheik Hanifah
First published:

Tags: Rajinikanth

அடுத்த செய்தி